Thursday, March 8, 2012

பரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி

5 கருத்துக்கள்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..

அ...ஆ...ஓஹோ....

பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம். 

இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult. 

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.  

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012. 

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர். 

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண <<இங்கே>> சுட்டவும். 

References:

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.